வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 30 மார்ச் 2022 (21:35 IST)

ஐபிஎல் புதிய விதியா? வீரர்களுக்கு கிடுக்கி பிடி போடப் போகும் பிசிசிஐ!

ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுக்கப்படும் வீரர்கள் காரணம் இல்லாமல் விலகினால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுக்கப்படும் வீரர்கள் திடீரென தொடரில் இருந்து விலகுவது இப்போது அதிகமாகி வருகிறது. இந்நிலையில் தற்போது அது போல் விலகும் வீரர்களுக்காக ஒரு புதிய விதிமுறையைக் கொண்டுவருவது சம்மந்தமாக பிசிசிஐ ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

அப்படி விலகும் வீரர்களிடம் விசாரணை நடத்தப்படும் எனவும், அந்த விசாரணையில் வீரர்கள் சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை என்றால் சம்மந்தப்பட்ட வீரர் அடுத்த சில் ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் தடை செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.