புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (14:40 IST)

கேன் வில்லியம்சன் அவுட்டா இல்லையா? ரசிகர்கள் அதிர்ச்சி!

கேன் வில்லியம்சன் அவுட்டா இல்லையா? ரசிகர்கள் அதிர்ச்சி!
நேற்று நடைபெற்ற ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த போட்டியில் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அவுட் இல்லை என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் தெரிய வந்துள்ளது.
 
நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் கொடுத்த கேட்சை கீப்பர் சஞ்சு சாம்சன் தவற விட்ட நிலையில் அருகில் இருந்த படிக்கல் அந்த பந்தை பிடித்தார். ஆனால் அவர் தரையில் பட்ட பந்தை தான் பிடித்தார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தனர்
 
பல தொழில்நுட்பங்கள் இருந்தும் இதுபோன்ற தவறுகள் நடப்பது போட்டியின் முடிவையே மாறிவிடும் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்