ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 30 மார்ச் 2022 (11:55 IST)

நேற்று ரோகித்.. இன்று வில்லியம்சன்..! – சம்பளமே அபராதத்துல போயிடும் போல இருக்கே!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மெதுவாக பந்து வீசியதற்காக ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் தொடங்கி நடந்து வரும் நிலையில் நேற்றைய முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது.

இரண்டாவதாக களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி ஆரம்பம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின்போது ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஐதராபாத் மெதுவாக பந்து வீசியதாக அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.