1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (08:07 IST)

இந்த இரு அணிகளுக்குதான் உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு… காரணம் சொல்லும் முத்தையா முரளிதரன்!

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த முறை இந்தியாவில் உள்ள மைதானங்களில் மட்டுமே நடக்க உள்ளதால் இந்திய அணிக்குக் கூடுதல் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த முறை இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நெதர்லாந்து, பங்களாதேஷ், நியுசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் கலந்துகொள்கின்றன.

இந்த தொடரில் அரையிறுதிக்கு செல்லும் அணிகளாக இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் பவுலர் முத்தையா முரளிதரன் உலகக் கோப்பை பற்றி பேசும் போது “இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பலமான அணிகளாக இருந்தாலும், ஆசியக் கண்டத்தில் தொடர் நடப்பதால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் போன்ற அணிகளுக்குதான் கூடுதல் பலம். இந்த உலகக் கோப்பை தொடரை இந்தியா அல்லது பாகிஸ்தான் வெல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளன்” எனக் கூறியுள்ளார்.