1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2023 (17:52 IST)

இந்தியா - பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்று போட்டி தினத்திலும் மழை வர வாய்ப்பு: வானிலை அறிக்கை

தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டியின் போது மழை வந்ததால் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சூப்பர் 4 சுற்று போட்டி வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ளது. 
 
கொழும்பு நகரில் இந்த போட்டி நடைபெற உள்ள நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் போட்டி நடைபெறும் பத்தாம் தேதி 90% மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. 
 
இதனை இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியும் மழையால் தடைபடும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran