முகமது ஷமியின் விவாகரத்து வழக்கு… முன்னாள் மனைவிக்கு மாதம் 4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ஷமி தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அவருக்குப் பல பெண்களோடு தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பான செய்தியினை வெளியிட்டு அவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றார்அவரது முன்னாள் மனைவி ஹாசின் ஜகான்.
இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இவர்களின் மகள் ஹாசினோடு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர்களின் விவாகரத்து சம்மந்தமான தனக்கு மாதம் 10 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் வேண்டுமென ஹாசின் கேட்டிருந்தார். இந்த வழக்கில் ஹாசினுக்கு மாதம் 1.4 லட்ச ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க வேண்டுமென மேற்கு வங்கத்தின் அலிபூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையெதிர்த்து ஹாசின் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஷமி மாதம் நான்கு லட்ச ரூபாய் ஜீவனாம்சமாக அவருக்கு வழங்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது.