திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 15 நவம்பர் 2024 (11:57 IST)

சிறுபிள்ளைத்தனமாக இந்தியா நடந்துகொள்கிறது… கண்டனத்தைத் தெரிவித்த பாகிஸ்தான் பவுலர்!

8 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டுதலுக்காக ஒரு அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை ஐசிசி அனுப்பியது.

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தொடரை நடத்துவதில் இருந்து விலகிக் கொள்வதாக தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து “இந்திய அணி, பாகிஸ்தான் வந்து விளையாடவில்லை என்றால் நாங்கள் இந்த தொடரை நடத்துவதைக் கைவிடுகிறோம்” என அறிவித்துள்ளது. இதனால் ஐசிசி தொடரை தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றும் ஆலோசனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி நடத்தும் பட்சத்தில் பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து விலகும் என தெரிகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பவுலர் முகமது அமீர் இதுகுறித்து பேசும்போது “இது கிரிக்கெட்டுக்குதான் நஷ்டம். இந்தியா வரவில்லை என்றால் மற்ற அணிகளோடு தொடரை நடத்துவதுதான் உத்தமம். ஒரு அணிக்காக அனைத்து அணிகளும் பாதிக்கப்படக் கூடாது. எல்லா அணிகளும் பாகிஸ்தான் வந்து விளையாடத் தயாராக இருக்கும்போது இந்தியா மட்டும் வரமறுப்பது சிறுபிள்ளைத் தனமானது” எனக் கூறியுள்ளார்.