1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

லக்னோ அணியில் இருந்து விலகிய மற்றொரு வீரர்… ஒன்னும் பயப்படாதீங்க நல்ல செய்திதான்

புள்ளிப் பட்டியலில் மேலே இருந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தற்போது அடுத்தடுத்த தோல்விகளால் பின் தங்கி வருகிறது. அதற்கு முக்கியக் காரணம் காயம் காரணமாக அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் காயம் காரணமாக விலகியதுதான்.

இந்நிலையில் இப்போது அந்த அணியில் இருந்து மற்றொரு முக்கிய வீரரும் விலகியுள்ளார். இங்கிலாந்து வீரரான மார்க் வுட் தனக்குக் குழந்தை பிறந்துள்ளதால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.