சதம் அடிக்க முடியாத வேதனை..! டப்பிங் வேலைக்கு போன சுப்மன் கில்?
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே ஸ்பைடர்மேன் படத்திற்கு டப்பிங் பேச சென்ற சம்பவம் வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் பேட்டிங்கில் அசத்தும் இளம் வீரர்களில் ஒருவராக சுப்மன் கில் இருக்கிறார். நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சுப்மன் கில் கடந்த போட்டியில் கிட்டத்தட்ட சதம் விளாச இருந்த நிலையில் ஓவர் முடிந்ததால் அவரது சாதனை மிஸ் ஆனது. ஆனாலும் தொடர்ந்து சுப்மன் கில்லின் அபார திறமை பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான் கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் மாறியுள்ளார் சுப்மன் கில். சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது Spiderman across the spiderverse என்ற கார்ட்டூன் அனிமேட்டட் திரைப்படம். இந்த படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தில் காமிக்ஸில் மற்றும் தோன்றிய இந்திய ஸ்பைடர்மேனான பவித் ப்ரபாகர் என்ற கதாப்பாத்திரம் முதன்முறையாக அறிமுகமாகிறது. இந்த கதாப்பாத்திரத்திற்கான இந்தி மற்றும் பஞ்சாபி மொழி வசனங்களை சுப்மன் கில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நிலையில் “சதம் அடிக்க முடியாத கோபத்தில் டப்பிங் பேச போயிட்டாரோ?” என சிலர் தமாஷாக கமெண்டுகளும் இட்டு வருகின்றனர்.
Edit by Prasanth.K