1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 மே 2023 (16:45 IST)

இந்த ஜெர்சி போட்டா ஜெயிக்கலாம்? கால்பந்து ஜெர்சியை போடும் லக்னோ!? – காரணம் என்ன?

LSG
நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவை நெருங்கியுள்ள நிலையில் தனது கடைசி போட்டியில் லக்னோ அணியினர் கால்பந்து அணி ஒன்றில் ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐபில் சீசன் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் லீக் போட்டிகள் முடிவை எட்டியுள்ளன. குஜராத் அணி ப்ளே ஆப்க்கு முன்னேறிவிட்ட நிலையில் மற்ற 3 இடங்களுக்காக போட்டி நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

தனது கடைசி லீக் போட்டியில் லக்னோ அணி கொல்கத்தா அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் லக்னோ அணி வென்றால் 17 புள்ளிகளுடன் ப்ளே ஆப் தகுதியை பெறும். இந்நிலையில் இந்த கடைசி போட்டியில் லக்னோ அணியினர் கொல்கத்தாவை சேர்ந்த ஏடிகே மொகுன் பகான் என்ற கால்பந்து அணியின் ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளார்களாம்.

நடப்பு ISL Football Championship போட்டியில் இந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணியினரை கௌரவிக்கும் விதமாக அவர்களின் ஜெர்சியை லக்னோ அணி வீரர்கள் அணிந்து விளையாட உள்ளனர். அவ்வாறு கூறப்பட்டாலும் செண்டிமெண்டலாக சாம்பியன்ஷிப் வென்ற ஒரு அணியின் ஜெர்சியை அணிவதால் லக்னோவுக்கு வெற்றி கிடைக்கும் என நினைக்கலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது. இவ்விரு அணிகளுக்குமே சஞ்சீவ் கோயங்காதான் நிறுவனர் என்பதால் அவர் இம்முடிவை எடுத்துள்ளார்.

Edit by Prasanth.K