1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (15:37 IST)

ஜிம்பாப்வே தொடரில் விளையாடாத கோஹ்லி… பிசிசிஐ-க்கு அனுப்பிய லேட்டஸ்ட் தகவல்!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி பிசிசிஐக்கு முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஜிம்பாப்வே செல்லும் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் கோஹ்லி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இடம்பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் முன்னணி வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த இளம் அணிக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிசிசிஐக்கு விராட் கோஹ்லி சமீபத்தில் ”தான் ஆசியக் கோப்பையில் இருந்து விளையாட தயாராக இருப்பேன்” என்று செய்தியை அனுப்பி உள்ளாராம். இதையடுத்து இனிமேல் தொடர்ந்து அவர் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று தெரிகிறது.