திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 28 ஜூலை 2022 (16:27 IST)

டி 20 போட்டிகளில் அதிக ரன்கள்… கோஹ்லி, ரோஹித் ஷர்மாவை முந்திய வீரர்!

டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக ரோஹித் ஷர்மா இருந்து வந்தார்.

டி 20 போட்டிகளில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தவர் விராட் கோலி. இதனால் பல ஆண்டுகளாக சர்வதேச டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை தக்க வைத்திருந்தார். ஆனால் சமீபத்தில் அவரின் மோசமான ஃபார்ம் காரணமாக அவரின் இந்த சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்து முதல் இடத்துக்கு வந்தார்.

இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக 21 ரன்கள் சேர்த்தபோது அவர் ரோஹித் ஷர்மாவை முந்தி டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். குப்தில், ரோஹித் ஷர்மா, கோலி ஆகிய மூவருக்கும் இடையே 100 ரன்களுக்குள்தான் வித்தியாசம் என்பதால் எந்த நேரத்திலும் யார் வேண்டுமானாலும் முதல் இடத்துக்கு வர வாய்ப்புள்ளது.