திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 23 அக்டோபர் 2023 (07:38 IST)

சதத்துக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை இழந்த கோலி! ரசிகர்கள் சோகம்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து அணியின்  மிட்செல் மிக அபாரமாக விளையாடி சதமடித்தார்.  அவருக்கு உறுதுணையாக ரச்சின் ரவிந்தரா அரைசதம் அடித்தார். இதனை அடுத்து நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது.  இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து பேட் செய்த இந்திய அணி சீரான் இடைவெளிகளில் விக்கெட்கள் விழுந்தவண்ணம் இருந்தன. ஆனால் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கோலி 95 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் 95 ரன்களில் இருக்கும் போது அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது, அவரின் சதத்துக்கும் 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சிக்ஸ் அடிக்க முயன்ற கோலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியுசிலாந்தை வென்றது.