வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (09:41 IST)

20 வருஷமா நியூஸிய தொடக்கூட முடியல..! இன்றைக்கு சம்பவம் செய்யுமா இந்தியா?

IND vs NZ
ஐசிசி உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இன்று நியூஸிலாந்து – இந்தியா அணிகள் மோத உள்ளன.



இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலக கோப்பை போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என மொத்தம் 10 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதி வருகின்றன. இதுவரை தலா 4 போட்டிகளில் அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் மோதியுள்ளன. இதில் ஒரு தோல்வி கூட இல்லாமல் நியூஸிலாந்து அணி முதல் இடத்திலும், இந்திய அணி இரண்டாவது இடத்திலும் புள்ளிகள் தரவரிசையில் உள்ளன.

இந்நிலையில் இன்று நியூஸிலாந்து – இந்தியா அணிகள் இடையே போட்டி நடைபெறுகிறது. 4 போட்டிகளாக தொடர் வெற்றியை கண்டு வந்த அணிகளில் முதல் தோல்வியை சந்திக்க போகும் அணி எது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுபோலவே கடந்த 2003ம் ஆண்டு முதலாக உலகக்கோப்பை ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி நியூஸிலாந்தை வென்றதே இல்லை என்ற ஒரு ரெக்கார்டும் உள்ளது.

இந்த 20 வருட தோல்வி ரெக்கார்டை இந்திய அணி இன்று முறியடித்து வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. மேலும் இன்றைய போட்டியில் விராட் கோலி சதம் அடித்தால் சச்சின் சாதனையை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K