வியாழன், 31 அக்டோபர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 31 அக்டோபர் 2024 (08:42 IST)

நாயகன் மீண்டும் வர்றான்… கேப்டன் பதவியை ஏற்கிறாரா கோலி?

ஒவ்வொரு தசாப்தத்திலும் ஒரு வீரர் கிரிக்கெட்டின் முகமாக  இருப்பார். முந்தைய தலைமுறையில் இருந்து கிரிக்கெட்டின் முகம் இன்னொரு வீரருக்கு மாறும். அப்படி சச்சின் மற்றும் தோனிக்குப் பிறகு உச்சப் புகழோடு உலகளவில் ரசிகர்களைப் பெற்று இருக்கிறார் கோலி. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அதிக சாதனைகளைப் படைத்த வீரராக கோலி இருக்கிறார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகள் அவருக்கு சிறப்பான ஆண்டுகளாக அமையவில்லை. தன்னுடைய மோசமான ஃபார்மில் இருந்து திரும்பி கோலி கடந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் 2024 ஆம் ஆண்டு மீண்டும் அவருக்கு ஒரு சோகமான ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 25 ரன்கள்தான் சேர்த்து வருகிறார். விரைவில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள நிலையில் கோலியின் ஃபார்ம் கவலையளிக்கிறது.

கோலி சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் கேப்டனாக பொறுப்பு வகித்த அனைத்து அணிகளில் இருந்தும் அந்த பொறுப்புகளில் இருந்து விலகிக் கொண்டார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆர் சி பி அணிக்கு அவர் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அடுத்த சீசனில் ஆர் சி பி அணிக்கு சரியானக் கேப்டன் கிடைக்கவில்லை என்பதுதான் என்று சொல்லப்படுகிறது.