செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (12:05 IST)

என்ன ஜோக் சொல்லிருப்பாரு?… இணையத்தில் வைரல் ஆகும் கம்பீர் & கோலி புகைப்படம்!

டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார் கவுதம் கம்பீர்.  இதையடுத்து புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். டி 20 தொடர் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடருக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. இதையடுத்து ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய வீரர்கள் இந்திய அணியோடு இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய பயிற்சியின் போது விராட் கோலியோடு கம்பீர் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கம்பீர் கோலியின் பேச்சைக் கேட்டு சிரித்தார். வழக்கமாக இறுகிய முகத்தோடு இருக்கும் கம்பீர், இப்படி வாய்விட்டு சிரித்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்த புகைப்படங்களைப் பகிரும் ரசிகர்கள் “கோலி அப்படி என்ன ஜோக் சொல்லிருப்பாரு” எனக் கேட்டு வருகின்றனர்.