திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2024 (11:36 IST)

கம்பீரை ஹீரோவாக முன்னிறுத்துகிறதா பிசிசிஐ?... அடுத்தடுத்து வெளியாகும் பதிவுகள்!

டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே தொடர் முடிந்துள்ள நிலையில் அடுத்து இலங்கை சென்று டி 20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதையடுத்து அவர் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது. இந்நிலையில் அணியில் கம்பீர் சில முடிவுகளை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடர் முழுவதுமே பிசிசிஐ, கவுதம் கம்பீரையே முன்னிறுத்தும் விதமாக பதிவுகளாக வெளியிடுகிறது. கம்பீர் வீரர்களுக்கு ஆலோசனை வழங்குவது, பயிற்சியை மேற்பார்வையிடுவது ஆகியவற்றை புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் கம்பீரை போஸ்டர் பாயாக பிசிசிஐ பயன்படுத்துவதாக ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.