ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 9 டிசம்பர் 2023 (14:26 IST)

கோலியோடு விவாதத்தில் ஈடுபட்டது ஏன்? கவுதம் கம்பீர் கொடுத்த விளக்கம்!

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் அவர் ஆர் சிபி அணி வீரரான விராட் கோலியிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் வீரர்களான கோலி மற்றும் நவீன் உல் ஹக் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதில் பெரிய வியப்பேதும் இல்லை. ஆனால் ஒரு அணியின் ஆலோசகரான கம்பீர் எதிரணி வீரரிடம் வம்புக்கு சென்றது கடுமையான விமர்சனங்களை எழுப்பியது.

இந்நிலையில் இப்போது கம்பீர் தான் நடந்து கொண்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் “அப்போது நான் ஒரு அணியின் ஆலோசகராக செயல்பட்டேன். அதனால் என் அணி வீரரைக் காக்கும் விதமாக நான் செயல்பட்டேன். நான் போட்டி நடக்கும் போது குறுக்கிடவில்லை. போட்டி முடிந்த பிறகும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆலோசகர் என்ற முறையில் நான் பேசினேன்” எனக் கூறியுள்ளார்.