1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 9 டிசம்பர் 2023 (14:00 IST)

சொன்னபடியே திரிஷா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்த மன்சூர் அலிகான்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் அந்த கால படங்களில் நடிகைகளை ரேப் செய்யும் காட்சிகள் வந்ததாகவும், அதேபோல இதிலும் எதாவது காட்சிகள் இருக்கும் என நினைத்ததாகவும் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தமிழ் சினிமாவின் பெரும்பாலான கலைஞர்கள் அவருக்குக் கண்டனம் தெரிவித்தும், அவர் தன் பேச்சில் தவறு இல்லை என பிடிவாதமாக இருந்து வருகிறார். இதற்கிடையில் திரிஷாவிட மன்னிப்பு கேட்டு ஒரு அறிக்கை வெளியிட்டார். பின்னர் அந்த அறிக்கையிலும் தான் மன்னிப்புக் கேட்கவில்லை என கூறினார்.

இந்நிலையில் இப்போது தன் மீது அவதூறு பரப்பியதாக திரிஷா, சிரஞ்சீவி மற்றும் குஷ்பு ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மூவரும் தலா ஒரு கோடியை தரவேண்டும் என அவர் இந்த வழக்கில் கூறியுள்ளார். இந்த வழக்கின் மூலம் கடந்த சில வாரங்களாக அமைதியான இந்த விவகாரம் இப்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.