நேற்று ஒரே இன்னிங்சில் 4 சாதனைகளை படைத்த கிங் கோலி!
நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. கிளாசன் மிக அபாரமாக விளையாட 104 ரன்கள் எடுத்தார். அதேபோல் 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி த்து வெற்றி பெற்றது. இதில் விராத் கோலி 63 பந்துகளில் அபாரமாக சதம் அடித்தார்.
இந்த சதம் ஐபிஎல் போட்டிகளில் கோலி அடிக்கும் ஆறாவது சதம் ஆகும். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதம் அடித்த கிறிஸ் கெய்ல் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். மேலும் நேற்று அவர் ஐபிஎல் போட்டிகளில் 7500 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்த சீசனில் இதுவரை 500 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார் கோலி. இதுபோல 6 முறை 500 ரன்களுக்கு மேல் சேர்த்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். மேலும் ஒரு சாதனையாக அனைத்து விதமான டி 20 போட்டிகளிலும் அதிக சதமடித்த இந்திய வீரர் என்ற ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார். ரோஹித் ஷர்மா 6 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்க, கோலி 7 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.