ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2024 (13:19 IST)

கோலிய பத்தி பேசிகிட்டு இருக்காங்க.. இவர்தான் ரியல் ஹீரோ – வன்மத்தைக் கக்கிய சஞ்சய் மஞ்சரேக்கர்!

ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை தொடர் கடந்த சில தினங்களாக நடந்து வருகின்றன. ஐபிஎல் பார்த்து உற்சாகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தொடர் சலிப்பான ஒன்றாகவே அமைந்துள்ளது. ஏனென்றால் இதுவரை நடந்த போட்டிகள் பெரும்பாலானவை எல்லாம் குறைந்த ஸ்கோர் அடிக்கப்பட்ட போட்டிகளாகவே அமைந்துள்ளது. இதுவரை ஒரே ஒரு போட்டி மட்டும் 200 ரன்களை தாண்டி சேர்க்கப்பட்டுள்ளது.

வலுவான பேட்டிங் லைன் அப் கொண்ட இந்தியாவுக்கும் இதே நிலைமைதான். இந்திய அணியில் இந்த சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி இரண்டு போட்டிகளிலும் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதில் “விராட் கோலி மற்றும் சில வீரர்களைப் பற்றி மட்டுமே இந்திய ஊடகங்கள் பேசி வருகின்றன. ஆனால் சத்தமே இல்லாம தனியாக வெற்றிகளைப் பெற்று தருகிறார் பும்ரா. சந்தேகமே இல்லாமல் இப்போதைய இந்திய அணியில் பும்ராதான் சிறந்த வீரர்” எனக் கூறியுள்ளார்.