ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 10 ஜூன் 2024 (07:51 IST)

பும்ரா செய்த மேஜிக்.. பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா..

உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்த போது முதல் பாதி முடிந்தவுடன் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பே இல்லை என்று சொன்ன நிலையில், பும்ரா செய்த மேஜிக் காரணமாக பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, பாகிஸ்தான் அணியின் அபார பவுலிங்கிற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.  ரிஷப் பண்ட் 42 ரன்கள் அக்சர் பட்டேல் 20 ரன்கள் ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 120 என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் விளையாடிய போது தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் இரண்டு பேரையும் பும்ரா தனது அபார மேஜிக் பவுலிங் மூலம் வீழ்த்தினார். அதன் பிறகு மீண்டும் ஒரு விக்கெட்டை அவர் வீழ்த்த பும்ரா எடுத்த மூன்று மேஜிக் விக்கெட்டுகளால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் மற்றும் அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். நேற்றைய போட்டியில் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியின் வெற்றி காரணமாக குரூப் ஏ அணியில் மீண்டும் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva