1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2023 (08:14 IST)

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரோஹித் ஷர்மா செஞ்சது தப்பா?… கெவின் பீட்டர்சன் பதில்!

நடந்து முடிந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்தான் திருப்புமுனை என்று சொல்லப்படுகிறது. அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் ஷர்மா கில்லின் விக்கெட்டுக்கு பிறகு நிதானமாக விளையாடி தனது விக்கெட்டை இன்னும் கொஞ்சம் நேரத்துக்கு காத்திருக்க வேண்டுமெனக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இதுபற்றி கேள்விக்கு பதிலளித்துள்ள முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் “அதைப் பற்றி நாம் ஏன் பேசவேண்டும். அந்த கேட்ச்சுக்கு முக்கியக் காரணம் டிராவிஸ் ஹெட்தான். அவர் அபாரமாக அந்த கேட்ச்சை பிடித்து விட்டார். அதை நாம் பாராட்டுவோம்” எனக் கூறியுள்ளார்.