1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India south Africa match starting time announced

இந்தியா vs தென்னாப்பிரிக்கா தொடர்… இந்திய பார்வையாளர்களை மனதில் கொண்டு மாற்றப்பட்டதா டி 20 போட்டி நேரம்!

இந்தியா
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றது. இதையடுத்து இந்தியாவில் நடந்த டி 20 தொடரில் இளம் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இதையடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு செல்லவுள்ள இந்திய அணி டி 20 , ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கவுள்ள டி 20 போட்டி தொடருக்கான போட்டி தொடங்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கும், மூன்றாவது போட்டி இரவு 8.30 மணிக்கும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களைக் கணக்கில் கொண்டு அதற்கேற்றவாறு போட்டி தொடங்கும் நேரத்தை நிர்ணயித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
டி 20 உலகக் கோப்பையில் கோலியை விட ரோஹித் ஷர்மாதான் தேவை… முன்னாள் வீரர் கருத்து!