செவ்வாய், 5 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 6 டிசம்பர் 2023 (11:31 IST)

தென்னாப்பிரிக்க டி 20 தொடரில் இருந்து விலகுகிறாரா தீபக் சஹார்?

ஆஸ்திரேலிய தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு சென்று மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதற்கான மூன்று இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கவுள்ள டி 20 போட்டி தொடருக்கான போட்டி தொடங்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கும், மூன்றாவது போட்டி இரவு 8.30 மணிக்கும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த டி 20 தொடரில் இடம்பெற்றிருந்த தீபக் சஹார் தந்தையின் உடல்நிலை காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலக உள்ளதாக சொல்லப்படுகிறது. தீபக் சஹாரின் தந்தை லோகேந்திர சிங் சஹார் மூளைப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.