திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 6 மே 2023 (14:54 IST)

கே எல் ராகுலுக்குப் பதில் லக்னோ அணியில் இணைந்த வீரர்!

சில தினங்களுக்கு முன்னர் லக்னோ மற்றும் ஆர் சி பி அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பீல்டிங் செய்யும் போது லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் இப்போது ராகுல் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் மற்றும் அடுத்த மாதம் தொடங்க உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆகியவற்றில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கே எல் ராகுலுக்கு மாற்று வீரராக லக்னோ அணியில் கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் அணியோடு இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.