1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 11 ஜூலை 2024 (07:40 IST)

இலங்கைத் தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டன் இல்லையாம்… இந்த வீரர்தானாம்!

உலகக் கோப்பை தொடர் முடிந்த நிலையில் தற்போது இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. உள்ளது. இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரரான சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தொடர் முடிந்ததும் இந்திய அணி அடுத்து இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரிலும் ரோஹித் ஷர்மா, கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் டி 20 போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும், ஒருநாள் தொடருக்கு கே எல் ராகுல் கேப்டனாகவும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் ரோஹித் ஷர்மா ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய அணிக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததால் கே எல் ராகுலுக்குதான் அடுத்த கேப்டனுக்கான முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிகிறது.