1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 10 ஜூலை 2024 (08:52 IST)

மகளிர் டி20 போட்டி: 84 ரன்களில் சுருண்ட தெ.ஆ. அணி.. விக்கெட் இழப்பின்றி இந்தியா அபார வெற்றி..!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வந்த நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

ஏற்கனவே நடந்த முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று சென்னை மைதானத்தில் நடந்த நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 17.1 ஓவரில் 84 ரன்கள் ஆல் அவுட் ஆனது.

இந்தியாவின் பூஜா அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் ராதா யாதவ் மூன்று கட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 85 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 10.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா 54 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதை அடுத்து தொடர் சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva