செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 9 அக்டோபர் 2024 (12:23 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஜோ ரூட் படைத்த சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த தற்கால தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுபவர் ஜோ ரூட். சமீபத்தில் அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் டெஸ்ட் போட்டிகளில் 12000 ரன்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டினார்.

தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் அதிக டெஸ்ட் ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை அவர் தன் கைவசம் வைத்துள்ளார். அவருக்கு ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் விராட் கோலி ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் ரூட் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 5000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் இந்த தொடரில் 16 சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் அவர் முதலிடத்தில் உள்ளார்.