செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2024 (18:35 IST)

3 பேட்ஸ்மேன்கள் சதம்.. 556 ரன்கள் எடுத்த பாகிஸ்தான்.. பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து?

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 556 ரன்கள் எடுத்துள்ளது.

இதில் கேப்டன் மசூத் 151 ரன்களும், சல்மான் அஹா 104 ரன்களும், ஷபிக் 102 ரன்களும் எடுத்துள்ளனர். மூன்று பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. இதனால், பாகிஸ்தான் அணி இமாலய ரன்களை சேர்த்துள்ளது.

இதனை அடுத்து, இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த நிலையில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளார்கள். இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், இங்கிலாந்து அணி இன்னும் 460 ரன்கள் பின்தங்கி உள்ளது. நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Edited by Mahendran