வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 11 மே 2024 (08:18 IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா ஜேம்ஸ் ஆண்டர்சன்?

அனைத்து விதமான லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துவிட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் 42 வயதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விடாப்பிடியாக விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவரால் முன்பு போல அதிக விக்கெட்களைக் கைப்பற்ற முடியவில்லை.

2002 ஆம் ஆண்டு தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ஆண்டர்சன் தற்போது 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அவர் விரைவில் சச்சின் டெண்டுல்கரின் அதிகபட்ச டெஸ்ட் போட்டி சாதனையை 200 டெஸ்ட் போட்டி என்ற சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது இங்கிலாந்து அணி கோடைக் காலத்தில் விளையாட உள்ள டெஸ்ட் தொடரோடு ஆண்டர்சன் ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் “அணியின் எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டிய நேரம்” எனக் கூறியதால் அவர் இந்த முடிவை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.