1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வியாழன், 9 மே 2024 (10:48 IST)

ஒரே நாளில் மொத்தமாக மெடிக்கல் லீவ் எடுத்த 25 ஊழியர்கள் டிஸ்மிஸ்.. டாடா அதிரடி..!

ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக மெடிக்கல் லீவ் எடுத்த 25 ஏர் இந்தியா ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவதாக டாடா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
டாடாவின் ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் திடீரென மெடிக்கல் லீவ் போட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டது என்பதும் ஒரு சில விமானங்கள் தாமதமாக சென்றது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் ஒரே நாளில் மொத்தமாக விடுமுறை எடுத்த விவகாரம் ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் பணியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் வேலை நிறுத்தம் செய்த 25 பேர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் விடுமுறை காரணமாக கடந்த இரண்டு நாட்களில் 86 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன என்பதும் இதனால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது 
 
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வேலைக்கு செல்ல தவறிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 25 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் விதிகளை மீறியதால் இந்த பணி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
தினமும் 360 விமானங்களை இயக்கி வரும் ஏர் இந்தியா இனி குறைவான விமானங்களை சில நாட்களுக்கு இயக்கும் என்று தெரிகிறது. டாடாவின் ஏர் இந்தியா நிறுவனத்தில் இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Mahendran