ஐபிஎல்-2023: லக்னோ ஜெயிண்ட்ஸ் அணிக்கு வெற்றி இலக்கு இதுதான்!
ஐபிஎல்-2023, இன்றைய எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி , லக்னோ ஜெயிண்ட்ஸ் அணிக்கு 183 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி மற்றும் லக்னோ அணிகள் மோதி வருகின்றன.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
இதில், இசஷான் கான் 15 ரன்னும், ரோஹித் ஸர்மா 11 ரன்னும், கிரீன் 41 ரன்னும் சூர்யகுமார் யாதவ் 33 ரன்னும், திலக் வர்மா 26 ரன்னும் அடித்தனர்.
20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து, லக்னோ ஜெயிண்ட்ஸ் அணிக்கு 183 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
லக்னோ அணி தரப்பில், நவீன் உல் ஹக் 4 விக்கெட்டும், தாகூர் 3 விக்கெட்டும், மொசின் கான் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.