வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2023 (14:27 IST)

பத்து தல படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பல இழுபறிகள், தாமதத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படம் ரிலீஸ் கட்டத்தை நெருங்கியுள்ளது. மார்ச் மாதம் 30 ஆம் தேதி (நாளை) ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த பெரியவெற்றியைப் படம் பெறவில்லை. ஆனால் தயாரிப்பு நிறுவனமோ ‘“எங்களின் 'பத்து தல' திரைப்படம் தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 500 திரையரங்குகளிலும் இன்று இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது. எங்களின் படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து இவ்வளவு அமோக வரவேற்பு கிடைத்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதற்காக, சிலம்பரசன் (STR) ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு முழு மனதுடன் எங்களது நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறோம். படம் குறித்து பாராட்டி அதை உயர்த்திய விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களின் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.’ என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வெளியாகி 28 நாட்கள் கழித்து பத்து தல திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.