Nepotism - சச்சினால் கிரிக்கெட்டில் ஒலிக்கும் எதிர்ப்பு!
மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.20 லட்சத்திற்கு சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் வாங்கியது.
ஐபிஎல் சீசன் 2021-க்கான வீரர்கள் ஏலம் நேற்று நடைபெற்றது. 292 வீரர்கள் ஏலம் விட தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் தென் ஆப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக ரூ.16.25 கோடிக்கு ஏலம் போனார். இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில் ஏலத்தின் கடைசி நபராக அர்ஜூன் தெண்டுல்கர் ஏலம் விடப்பட்டார். அவரை அடிப்படை விலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.20 லட்சத்திற்கு வாங்கியது.
அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்ததால் இதுவரை பாலிவுட்டில் மட்டுமே ஒலித்து வந்த Nepotism எனும் சொல் தற்போது கிரிக்கெட்டிலும் ஒலிக்க துவங்கியுள்ளது.