புதன், 18 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 17 அக்டோபர் 2024 (09:39 IST)

டாஸ் வென்ற இந்திய அணி பேட் செய்ய முடிவு… இரண்டாவது நாளில் தொடங்கிய போட்டி!

வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி அடுத்து நியுசிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் தொடங்க இருந்தது.

ஆனால் மழை காரணமாக நேற்று முழுவதும் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாம் நாளான இன்று போட்டி தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளார். இந்திய அணி தற்போது களமிறங்கி பேட் செய்து வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியில் கழுத்து வலி காரணமாக இளம் வீரர் ஷுப்மன் கில் விளையாடவில்லை. அவருடைய இடத்தில் கே எல் ராகுல் விளையாடுகிறார். சர்பராஸ் கான் அணியில் இணைந்துள்ளார்.