செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (13:09 IST)

டாஸ் வென்றது இந்தியா –முதலில்?

இந்தியா மற்றும் மே.இ.தீ. அணிகளுக்கிடையிலான இன்று நடைபெறும் நான்காவது ஒருநாள் போட்டியில்  இந்தியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிஙகை தேர்வு செய்துள்ளது.

நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டையில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 க்கு என சமநிலையில் உள்ளது.

எனவே இன்று நடைபெறும் போட்டியில் தொடரை வெல்ல இரு அணிகளும் வெற்றி பெறுவது முக்கியம் என்பதால் போட்டியில் பரபரப்பிற்குப் பஞ்சம் இருக்காது. இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்க இருக்கிறது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேதார் ஜாதவ்வும் ஜடேஜாவும் அணிக்குத் திரும்பி உள்ளனர்.

இந்திய அணி;-
ரோஹித் ஷர்மா, தவான், கோஹ்லி, ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், ஜடேஜா, புவனேஷ்குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது, பூம்ரா

மேற்கு இந்திய தீவுகள் அணி:-
கைரன் பவல், ஹேம்ராஜ், ஷேய் ஹோப், மார்லன் சாமுவேல்ஸ், ஹெட்மைர், ரோவன் பவல், ஹோல்டர், ஃபேபிடன் ஆலன், ஆஷ்லே நர்ஸ், கேமார் ரோச், கீமோ பால்