1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Pakistan competitions with India in space research

இந்தியா பாகிஸ்தான் ஏட்டிக்கு போட்டி!

பாகிஸ்தான்
கிரிக்கெட் போட்டிகளில் பல ஆண்டுகளாக விளையாடி வராத இந்தியா பாகிஸ்தான் இடையே விண்வெளிப் பயணத்தில் போட்டி ஏற்படுள்ளது. 
 
ஆம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ,  விண்வெளித்துறையில் புதிய மைல் கல்லாக வரும் 2022 ஆம் ஆண்டு விண்ணுக்கு மனிதனை அனுப்பி ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. 
 
இதனை பின்பற்றி இந்தியாவிற்கு ஏட்டிக்கு போட்டியாக பாகிஸ்தானும் வரும் 2022 ஆம் ஆண்டு விண்ணுக்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ளது. சீனாவின் உதவியுடன் இந்த திட்டத்தை பாகிஸ்தான் முன்னெடுத்துள்ளது. 
 
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்துக்கு பிரதமர் தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்து விட்டதாகவும், இதற்கான ஒப்பந்தமும் சீன நிறுவனத்துடன் கையெழுத்தாகி இருப்பதாகவும் பாகிஸ்தான் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
திடீர் திருப்பம் - தினகரன் அணிக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி, ஓபிஎஸ்