வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 27 அக்டோபர் 2018 (18:13 IST)

284 ரன்கள் இலக்கு: களமிறங்கிய இந்தியா!

இந்தியா -  வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான  5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. தொடரின் முதல் போட்டி கடந்த 21 ஆ தேதி கவுகாத்தியில் துவங்கியது. 
 
இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து முன்னிலை வகித்தது. அடுத்ததாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் டையில் முடிந்தது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்து புதிய சாதனையை படைத்தார். 
 
இந்நிலையில் 3 வது ஒரு நாள் போட்டி இன்று புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது. 
 
அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 49.1 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்கள் குவித்தது. 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. 
 
ரோகித் சர்மா மற்றும் தவான் களமிறங்கியுள்ள நிலையில் ஒரு ஓவர் முடிவில் 4 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது இந்திய அணி.