மோடி, ஜப்பான் செல்ல அப்படி என்னதான் காரணம்....?

Shinzo Abe
Last Modified சனி, 27 அக்டோபர் 2018 (18:22 IST)
பாரதபிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். 
இந்நிலையில் மோடியின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தலைநகர் டோக்கியோவில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தூரத்தில் புஜி மலை உச்சியில் இருக்கும் ஒரு பன்ணை வீட்டில் வைத்து மோடிக்கு விருந்து கொடுக்க முடிவெடுத்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது இந்தியா- ஜப்பான் ஆகிய இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேம்படுத்துவது.இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் (அடங்காத எல்லை பிரச்சனை ) சீனாவின் ஆதிக்கத்தை கண்காணிப்பது பற்றிய முக்கிய விவரங்கள் பேச உள்ளதாக தெரிகிறது.
 
தற்போது அமெரிக்க - சீனா இடையேயான  வர்த்தகபோர் நடைபெர்றுக் கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையில்  இந்தியா- ஜப்பான் ஆகிய இருநாடுகளுக்கிடையேயானப்பொருளாதர ஒப்பந்தங்கள் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை பற்றி விரிவாக ஆலோசனை நடத்தப்போவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 


இதில் மேலும் படிக்கவும் :