1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (13:32 IST)

ஒரு நாள் போட்டி ரேட்டிங் தரவரிசையில் இந்தியா முதலிடம்!

ஒரு நாள் போட்டி ரேட்டிங் தரவரிசையில் இந்தியா முதலிடம்!

நேற்று கொல்கத்தாவில் நடந்த இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 50 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி ஒரு நாள் போட்டிகளின் ரேட்டிங் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளது.


 
 
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள், 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் நடந்தது. அதில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியில் கொல்கத்தா ஈடர்ன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது.
 
இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் குவித்தது. 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் மட்டுமே குவித்தது.
 
இதன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 50 ரன்கள் வித்தியாத்தில் வீழ்த்தியது. இந்திய அணி தற்போது 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த தொடர் வெற்றிகளின் மூலம் இந்திய அணி ஒரு நாள் தரவரிசையின் ரேட்டிங்கில் முன்னேறி 119 ரேட்டிங்குடன் முதலிடத்தை தென் ஆப்ரிக்க அணியுடன் பகிர்ந்துள்ளது.
 
ஆனால் புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி 358 புள்ளிகள் தென் ஆப்ரிக்க அணியைவிட குறைவாக பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளை மறுதினம் இந்தூரில் நடைபெற உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால் தென் ஆப்ரிக்காவை முந்தி முதல் இடத்துக்கு முன்னேறும். இந்திய அணி டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் முதலிடத்திலும், டி20 போட்டிகள் தரவரிசையில் 5-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.