சீன வீரர்களை ஏலம் எடுத்த பாகிஸ்தான்


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (11:29 IST)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இரண்டு சீன வீரர்களை பெஷாவர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

 

 
இந்தியாவில் ஐபிஎல் போன்று பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அடுத்த வருடத்திற்கான தொடரில் இரண்டு சீன வீரர்கள் விளையாட உள்ளனர். பெஷாவர் ஷல்மி என்ற அணி அவர்களை ஒப்பந்தம் செய்துள்ளது.
 
சீனாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய கிரிக்கெட் அணிகள் உள்ளது. ஆனால் அவர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில்லை. சீனாவில் பெஷாவர் ஷல்மி அணியின் உரிமையாளர் அடுத்த மாதம் வீரர்களை ஒப்பந்தம் செய்ய உள்ளார். 
 
மேலும் சீனாவை பொது இடமாக கொண்டு விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :