1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (09:56 IST)

தொடரை கைப்பற்றுமா இந்தியா? – தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்!

India South Africa
தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று தொடங்க உள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இன்று கவுஹாத்தியில் இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. முந்தைய போட்டி தோல்வியை இன்று வெற்றி பெற்று சமன் செய்ய தென்னாப்பிரிக்கா முயலும். இதற்கிடையே கவுஹாத்தியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் போட்டி பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் உள்ளது.

முந்தைய போட்டியில் காயமடைந்ததால் இந்திய பந்து வீச்சாளார் ஜாஸ்ப்ரிட் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் இன்றைய போட்டியில் விளையாட உள்ளார்.

Edited by: Prasanth K