பரபரப்பான இறுதிப்போட்டி.. சாம்பியன் பட்டம் வென்றது இந்தியன் லெஜண்ட் அணி!
பரபரப்பான இறுதிப்போட்டி.. சாம்பியன் பட்டம் வென்றது இந்தியன் லெஜண்ட் அணி!
ரோடு சேப்டி வேல்ர்ட் சீரியஸ் கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்து வந்தது என்பதும் இந்த போட்டியில் ஓய்வு பெற்ற வீரர்கள் கொண்ட அணிகள் விளையாடியது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி நேற்று நடைபெற்றது
இந்த போட்டியில் இந்திய லெஜண்ட் அணி இலங்கை அணியை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. ஓஜா அபாரமாக விளையாடி 108 ரன்கள் எடுத்தார்
இதனை அடுத்து 196 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதனை அடுத்து இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva