1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 ஜூலை 2024 (18:34 IST)

ஜிம்பாப்வே அணிக்கு 167 ரன்கள் இலக்கு வைத்த இந்தியா! ஆறுதல் வெற்றியாவது பெறுமா ஜிம்பாப்வே?

India vs Zimbabwe

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடந்து வரும் நிலையில் இந்திய அணி 168 ரன்களை இலக்காக வைத்துள்ளது.

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஜிம்பாப்வே வென்றிருந்தாலும் அடுத்த 3 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்தியாவின் தொடருக்கான வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் இன்று நடக்கும் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஆகியோர் 12, 13 ரன்களிலேயே அவுட் ஆகினர். ஆனால் சஞ்சு சாம்சன் நின்று விளையாடி அரைசதம் விளாசி 58 ரன்களை குவித்தார். தொடர்ந்து ரியான் பராக் 22 ரன்களும், ஷிவம் துபே 26 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்த இந்திய அணி 168 ரன்களை இலக்காக வைத்துள்ளது.

இந்நிலையில் களமிறங்கியுள்ள ஜிம்பாப்வே அணி 3 ஓவருக்குள்ளேயே 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Edit by Prasanth.K