செவ்வாய், 6 ஜூன் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (14:22 IST)

டி 20 உலகக்கோப்பை தொடர்… இந்தியா பாகிஸ்தான் போட்டியின் டிக்கெட்கள் விற்பனை முடிவு!

சமீபத்தில் ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் நடந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. மைதானத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்த நிலையில், தொலைக்காட்சி மற்றும் ஓடிடி ஆகியவற்றிலும் போட்டியை பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் டி 20 உலகக்கோப்பை தொடரின் போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே முழுவதும் விற்றுத்தீர்ந்துள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் நடக்கும் போட்டியைக் காண 50 ஆயிரம் டிக்கெட்கள் விற்றுள்ளன. இந்நிலையில் டிக்கெட் மறுவிற்பனை தளம் போட்டி நெருங்கும் நேரத்தில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.