1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (12:51 IST)

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்தியா- பூடான் நுழைவு வாயில்கள் திறப்பு

india bhutan
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்தியா- பூடான் நுழைவு வாயில்கள் திறப்பு
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா மற்றும் பூடான் நுழைவாயில் திறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன
 
அசாம் மாநிலத்தை ஒட்டி பூடான் எல்லையில்  இந்தியா மற்றும் பூட்டான் நாடுகளின் 2 நுழைவாயில்கள் உள்ளன. வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லை பூட்டப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் தற்போது இந்தியா மற்றும் பூடான் ஆகிய இரண்டு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. எனவே இந்த நுழை வாயிலைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது
 
அதன்படி செப்டம்பர் 23ஆம் தேதி முதல் இந்த இரண்டு நுழைவாயிலும் திறக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் இந்த புதிய நுழைவாயில் மூலம் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த நுழைவாயிலாக செல்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் பூட்டான் அரசு அறிவித்துள்ளது