செவ்வாய், 6 ஜூன் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Updated: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (14:07 IST)

3வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி: தொடரை வென்றது இங்கிலாந்து மகளிர் அணி!

england women
3வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி: தொடரை வென்றது இங்கிலாந்து மகளிர் அணி!
இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 
 
ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று இருந்த நிலையில் நேற்று 3வது டி20 போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது

 
இதனையடுத்து இங்கிலாந்து அணி 123 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது என்பது குறிபிடத்தக்கது 
 
நேற்றைய போட்டியில் இந்திய அணியின் 7 வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் தங்கள் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்றைய வெற்றியால் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.