செவ்வாய், 6 ஜூன் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (14:21 IST)

17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள சர்வதேச கிரிக்கெட் அணிகள் தயக்கம் காட்டி வந்தன. அதற்குக் காரணம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்களின் பேருந்து மேல் தாக்குதல் நடத்தப்பட்டதே.

ஆனால் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இப்போது பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாட கிரிக்கெட் வாரியங்கள் சம்மதித்து வருகின்றன. அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை, பங்களாதேஷ் நாடுகள் சென்று விளையாடி வந்த நிலையில் இப்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் 7 டி 20 போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. அதன் பின்னர் டிசம்பர் மாதம் மறுபடியும் சென்று 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.