லாஸ்ட்ல ஃபர்ஸ்ட்டா வர போவது யார்? – இன்று இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதல்!
உலக கோப்பை போட்டிகளில் இன்று இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகள் மோத உள்ள நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஐசிசி உலக கோப்பை போட்டிகள் விருவிருப்பான இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளதோடு மட்டுமல்லாமல் முதல் அணியாக அரையிறுதி போட்டிகளுக்கும் தகுதி பெற்றுள்ளது.
அதற்கு அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணி 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பெறுவதற்காக இன்று இந்தியாவுடன் தென்னாப்பிரிக்கா மோதுகிறது. புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும் NRR -ல் தென்னாப்பிரிக்கா இந்தியாவை விட அதிகமாக உள்ளது.
இதனால் இந்த போட்டியில் வென்றால் இந்தியாவுக்கு நிகரான புள்ளிகளை பெறுவதுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தையும் பெறும் வாய்ப்பு உள்ளதால் தென்னாப்பிரிக்கா இந்த போட்டியில் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல இந்திய அணியும் தனது தொடர் வெற்றியை தக்கவைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இந்த போட்டியில் விராட் கோலி தனது 49வது செஞ்சுரியை அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உள்ளது.
Edit by Prasanth.K